உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை பார்க்க பொதுமக்கள் 10 பேருக்கு மட்டுமே அனுமதி என்று போலீசார் கூறியதால் காத்திருந்த பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர்.

28-11-2026 | 14:17


மேலும் இன்றைய போட்டோ

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு, போராட்டம் நடத்திய கம்யூ., கட்சிகள். அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்.

28-11-2026 | 14:20


கோவை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவை கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியில் நடந்தது.

28-11-2026 | 14:18


ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நடைபெற்று வரும் அரசு புத்தக கண்காட்சி அரங்குகளிலிருந்து புத்தகங்கள் வாங்கி செல்லும் மாணவிகள்.

28-11-2026 | 13:06


ஊட்டி படகு இல்லத்திற்கு படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

28-11-2026 | 13:06


கள்ளக்குறிச்சி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்தது.

28-11-2026 | 12:17


திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்க வந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது; அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.

28-11-2026 | 12:15


கடலூரில் தோன்றிய வானவில். இடம்: கடலூர் கலெக்டர் அலுவலகம்

28-11-2026 | 10:28


இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் நோக்கி, வேலுடன் புறப்பட்ட திருப்பூர் பெண் பக்தர்கள்.

28-11-2026 | 10:26


இன்று மாலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றத்துக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த மத்தியப்படை வீரர்களை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்.

28-11-2026 | 10:25