உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  பேக்கிங் உணவில் சாதித்த மத்திய அமெரிக்க பெண்

 பேக்கிங் உணவில் சாதித்த மத்திய அமெரிக்க பெண்

- நமது நிருபர் -: யோகா, பேக்கிங் உணவு செய்ய கற்றுக் கொள்வதற்காக, மத்திய அமெரிக்காவில் இருந்து மைசூருக்கு வந்தவர், இன்று தனியாக பேக்கரி அமைத்து, வாடிக்கையாளர்களுக்கு பிடித்த கடையாக மாற்றி உள்ளார். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர் ரகீல், 25. அங்கு பட்டப்படிப்பை முடித்த அவர், யோகா, பேக்கிங் உணவு செய்ய கற்றுக் கொள்வதற்காக, 2019ல் மைசூரு வந்தார். கொரோனா தொற்று பரவ துவங்கியதால், யோகா, சமையல் கற்க வேண்டும் என்ற அவரின் திட்டம் சீர்குலைந்தது. உணவகத்தில் வேலை ஆனாலும், தனது பாரம்பரிய உணவான, 'கிரோசண்ட்' சாப்பிட முடியவில்லையே என ஏங்கினார். கொரோனாவுக்கு பின், மைசூரு நகரின் கோகுலம் பகுதியில் உள்ள 'எஸ்.ஏ.பி.ஏ.,' என்ற உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு கிரோசண்ட் உணவு தயாரிப்பில் தனது திறமையை வளர்த்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றி, பேக்கிங் உணவில் தேர்ச்சி பெற்ற நிபுணரானார். பின், மைசூரு ஒன்டிகொப்பாலில், 'தி லோக்கல் பிரெண்ட்லி பேக்கரி' துவக்கினார். இதன் ருசி புதிதாக இருந்ததால், விரைவிலேயே வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வர துவங்கினர். அதுமட்டுமின்றி, தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களுடன் மாலை நேரத்தில் இங்கு வருகின்றனர். வெற்றி கதை தன் வெற்றி குறித்த ரகீல் கூறியதாவது: பேக்கரி திறக்கும் போது, உணவுகள் அன்றைய தினம் செய்ததாக புதிதாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். ஒரு பேக்கரிக்கு, சமையல் குறிப்பு விளக்கம், செயல்படுத்துதல், சமையல் கலையில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம். இத்தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள், தங்களை முழுமனதுடன் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். என் பாட்டி, அவரது தாயார் செய்யும் வாழைப்பழ ரொட்டி, பேகல்ஸ், பிளாக்பெர்ரி கேக் என பல பேக்கிங் சமையல் குறிப்புகள் அடங்கிய, 'டைரி' வைத்து உள்ளார். அதை பொக்கிஷமாக என் தாயார் பாதுகாத்து வருகிறார். அதில் அனைத்து வகையான பேக்கிங் உணவுக்கான ரெசிப்பிகள் உள்ளன. வாரந்தோறும் புதுப்புது பேக்கிங் உணவுகளை அறிமுகப்படுத்துகிறேன். இதை ருசிக்க பலரும் வருகின்றனர். விசேஷ நாட்கள், குறிப்பாக காதலர் தினத்தன்று சாக்லேட்கள் இடம் பெறும் வகையில் பேக்கரி உணவுகள் இருக்கும். ஆரம்பத்தில் என் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக துவங்கிய பேக்கிங் பணியை, இப்போது ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டேன். உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறியுங்கள். பின், அதனை உங்களின் வாழ்வாதாரமாக மாற்றிக் கொள்ளுங்கள். 20 மணி நேரம் இத்தொழிலில் உள்ள ஈடுபாட்டால், பேக்கரி உணவு தயாராக சில நாள், 20 மணி நேரம் தொடர்ந்து உழைத்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இதற்கு எனது அன்பு ஊழியர்களும் காரணம். வெளிநாட்டை சேர்ந்தவர் மைசூரில் தொழில் துவங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. பல தடைகளை தாண்டி தான் இந்த பேக்கரியை துவக்கினேன். தொழில்முனைவோர், உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரை விட்டு பிரிந்து இங்கிருந்தாலும், மைசூரு எனக்கு சொந்த ஊர் போன்ற உணர்வை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை