உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  பழங்குடியினர் விளையாட்டு போட்டி நீச்சலில் சாதித்த கர்நாடக வீரர்கள்

 பழங்குடியினர் விளையாட்டு போட்டி நீச்சலில் சாதித்த கர்நாடக வீரர்கள்

- நமது நிருபர் -: விளையாட்டு போட்டிகளில் பழங்குடியின சமூகத்தினர் பங்கேற்பதற்காக, 'கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டு போட்டியை' மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த போட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே, இப்போட்டியின் நோக்கம். தங்க பதக்கம் இதில், தடகளம், நீச்சல் கால்பந்து, ஹாக்கி, பளு துாக்குதல், வில்வித்தை, நீச்சல், மல்யுத்தம் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் உள்ளன. இந்த ஆண்டுக்கான போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. அடுத்த மாதம், 3ம் தேதி வரை நடக்கிறது. நாடு முழுதும் இருந்து, 3,800 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் நாளான நேற்று முன்தினம் நீச்சல் போட்டிகள் துவங்கின. ஆடவர், 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கர்நாடகாவின் தோனீஷ் முதல் இடம் பிடித்து, தங்க பதக்கத்தை உறுதி செய்தார். முதல் இடம் அதேபோல, மகளிருக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கர்நாடகாவின் நிதி இரண்டாம் இடம் பிடித்தார். வெள்ளி பதக்கத்தை பெற்றார். அதேபோல, ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில், கர்நாடகாவின் மணிகண்டா, பெண்களுக்கான 100, 50 மீட்டர் போட்டிகளில், மெஹன்ஜலி ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். இதன் மூலம், முதல் நாள் முடிவில் கர்நாடகா அணி நீச்சல் போட்டியில் ஐந்து தங்க பதக்கம் உட்பட ஏழு பதக்கங்களை பெற்றது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது. ஒடிஷா அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நீச்சல் போட்டியில் கர்நாடக வீரர், வீராங்கனையர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !