உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

- நமது நிருபர் -: சாப்பாட்டுக்கு தொட்டுக்க, மரவள்ளி கிழங்கு மசாலா எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் l மரவள்ளி கிழங்கு - 1/4 கிலோ l கடுகு - 1/2 டீஸ்பூன் l இஞ்சி - சிறிது l பச்சை மிளகாய் - 1 l கறிவேப்பிலை - ஒரு கொத்து l சின்ன வெங்காயம் - 1 கப் l தக்காளி - 1 l மல்லி தூள் - 1 டீஸ்பூன் l மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் l மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் l கொத்தமல்லி - சிறிதளவு l தேங்காய் எண்ணெய் தேவையான அளவு l உப்பு தேவையான அளவு செய்முறை முதலில் மரவள்ளி கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லி துாள், மிளகாய் துாள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின், கொதி வந்ததும் வேக வைத்துள்ள மரவள்ளி கிழங்கை சேர்த்து தண்ணீர் சுண்டும் அளவிற்கு நன்கு வதக்கவும். இதில், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழைகளை துாவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு மசாலா தயார். இதை சாம்பார் சாதத்துடன் தொட்டு சாப்பிடும் போது, சுவை அருமையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை