அறுசுவை அறிவிப்பு கட்டுரை --- வீட்டிலேயே முந்திரி, பாதாமில் ஐஸ்கிரீம் செய்யலாம்
- நமது நிருபர் -: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில், சாக்லேட்டுக்கு அடுத்தபடியாக ஐஸ்கிரீம் இருக்கும். அது, குளிர் காலம், மழை காலமாக இருந்தாலும், ஐஸ்கிரீம் தான் அவர்களுக்கு விருப்பமானது. வீட்டிலேயே அதிக நேரம் கெடாமல் இருக்கும் வகையில் ஐஸ்கிரீம் செய்யலாம். தேவையான பொருட்கள் * பாதாம் - 1 கப் * முந்திரி - 1 கப் * மக்கானா - 1 கப் * தேங்காய் பால் - 1 கப் * பேரீட்சம் பழம் - அரை கப் * கோகோ பவுடர் - அரை கப் செய்முறை * ஒரு பெரிய பவுலில் ஒரு கப் பாதாம், ஒரு கப் முந்திரி, ஒரு கப் மக்கானா எடுத்து கொள்ள வேண்டும். * இதனுடன் ஒரு கப் தேங்காய் பால், அரை கப் பேரீட்சம்பழம், அரை கப் கோ கோ பவுடரை கலந்து கொள்ளவும். * இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். * ஒருவேளை உங்களுக்கு கொஞ்சம் இனிப்பு சுவை அதிகம் வேண்டும் என்றால், சிறிதளவு நாட்டு சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். * இறுதியாக இந்த கலவையை ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி 4 மணி நேரத்திற்கு மேல் பிரீட்ஜில் வைத்து எடுத்து வைக்கவும். * பின் ஐஸ்கிரீம் மோல்டை வெளியில் எடுத்தால் போதும். சுவையோடு ஆரோக்கியம் நிறைந்த பாதம் மற்றும் முந்திரி ஐஸ்கிரீம் ரெடி.