| ADDED : டிச 06, 2025 05:28 AM
l உருளைக்கிழங்கு குருமா செய்யும்போது சோம்பு, கிராம்பு அனைத்தையும் அரைத்து சேர்த்தால் சுவையோ சுவை. l ஜவ்வரிசி வைத்து பாயசம் செய்யும்போது, 2 ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து சேர்த்தால், பாயசம் கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும். l கத்திரிக்காய் கூட்டு செய்யும்போது கொஞ்சம் கடலை மாவை துாவினால் கூட்டின் சுவை அதிகரிக்கும். l தக்காளி சட்னிக்கு சிறிது புளி சேர்த்து அரைத்தால் சுவை கூடும். l இட்லி மாவில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கிண்டி, 10 நிமிடங்களுக்கு பின் இட்லி ஊற்றினால், இட்லி மெதுவாக வரும். l தயிர் புளிக்கும் நிலைக்கு வரும்போது, அதில் ஒரு தேங்காய் துண்டை போட்டு வைத்தால் அதிகமாக புளிக்காது. l மோரில் மிளகு, சீரகத்தை அரைத்து பொடியாக சேர்த்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும். l புளியோதரை செய்வதற்கு சாதம் வேகவைக்கும்போது, அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அப்போது தான், சாதம் உதிரியாக வரும். l அரிசியில் பூச்சி வராமல் இருக்க, பிரியாணி இலை போட வேண்டும். l முட்டை வேக வைக்கும்போது அதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். இதனால், முட்டை தோலை எளிதில் உரித்து எடுக்கலாம்.