உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  ஆரோக்கியம் நிறைந்த வரகு உக்காரை

 ஆரோக்கியம் நிறைந்த வரகு உக்காரை

- நமது நிருபர் -: இனிப்புடன் எந்த வேலையை துவங்கினாலும், சிறப்பாக முடியும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் இந்த வாரம் வரகு உக்காரையை செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: l வரகு --- 100 கிராம் l பாசிப்பருப்பு --- 100 கிராம் l வெல்லம் -- 150 கிராம் l நெய் -- 50 கிராம் l முந்திரி -- 10 l தேங்காய் துருவல் --- கால் கப் l ஏலக்காய், சுக்குத்துாள் -- போதுமான அளவு செய்முறை l வரகு மற்றும் பாசிப்பயிறு இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். l பின்னர், இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். குக்கரில் இல்லையென்றால் வழக்கமாக சமைப்பது போன்று சமைக்கவும். இரண்டும் மிகவும் குழைவாக இருக்க வேண்டும். குழைந்து இருந்தால் மட்டுமே சுவை அதிகமாக இருக்கும். l வெல்லத்தை நன்கு பொடியாக்கிக் கொண்டு வெல்லபாகு காய்ச்சிக் கொள்ளவும். l வேக வைத்துள்ள வரகு, அரிசியில் சேர்த்து நன்கு கிளறவும். l ஏலக்காய் துாள், சுக்குத்துாள் சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் வரகு உக்காரை தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை