உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  ஆரோக்கியத்தை அளிக்கும் கேழ்வரகு கேக்

 ஆரோக்கியத்தை அளிக்கும் கேழ்வரகு கேக்

- நமது நிருபர் - கேழ்வரகு உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் நல்லது. ஆனால் இதை பயன்படுத்தி தயாரித்த தோசை, இட்லி போன்ற சிற்றுண்டிகளை பலர் சாப்பிட மறுக்கின்றனர். கேக் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. கேழ்வரகில் சுவையான கேக் செய்து கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். தேவையான பொருட்கள் l கேழ்வரகு மாவு - முக்கால் கப் l கோதுமை மாவு - முக்கால் கப் l கோகோ பவுடர் - 2 ஸ்பூன் l பேக்கிங் பவுடர் - ஒன்றரை ஸ்பூன் l சமையல் சோடா - அரை ஸ்பூன் l உப்பு - 1 சிட்டிகை l வெல்லப்பொடி - 200 கிராம் l ஜெர்ரி, உலர்ந்த பழங்கள் - அரை கப் l தயிர் - அரை கப் l பால் - முக்கால் கப் l வெனிலா எசென்ஸ் - தேவையான அளவு l நெய் அல்லது வெண்ணெய் - அரை கப் l டார்க் சாக்லேட் - சிறிதளவு செய்முறை ஒரு பாத்திரத்தில், வெல்லத்துாளில், கால் கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆற வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி, அதில் வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்பின் கேழ்வரகு மாவு, பேக்கிங் பவுடர், சமையல் சோடா, வெனிலா எசென்ஸ், கோகோ சேர்த்து கட்டிகள் இல்லாமல் மெதுவாக கலக்கவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும். கேக் ட்ரேவில் நெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவை துாவவும். இதில் கேக் கலவையை ஊற்றவும். அதன் மீது பொடித்த சாக்லேட், உலர்ந்த பழங்களை துாவவும். குக்கரில் ஒரு கப் உப்பை போட்டு உள்ளே, ஒரு ஸ்டேண்ட் வைக்கவும். குக்கரின் மூடியில் உள்ள ரப்பர் மற்றும் விசிலை கழற்றி விடவும். குக்கரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் சூடாக்கவும். அதன் பின் கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடவும். மிதமான தீயில் வைத்து, 30 முதல், 35 நிமிடங்கள் வேக வைக்கவும். கேக்கின் நடுவில் கத்தி அல்லது டூத் பிக் பயன்படுத்தி குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிறந்த நாள் பார்ட்டிக்கு கேழ்வரகு கேக் செய்யலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். முட்டை சேர்க்கப்படாததால், அனைவரும் சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை