உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பள்ளிபாளையம் ஸ்பெஷல் நாட்டு கோழி கிரேவி

பள்ளிபாளையம் ஸ்பெஷல் நாட்டு கோழி கிரேவி

அசைவ பிரியர்களில் சிலருக்கு சிக்கனை விட நாட்டு கோழி மிகவும் பிடிக்கும். நாட்டு கோழி குழம்பு, நல்லெண்ணெய் ஊற்றி செய்தால் உடம்புக்கு நல்லது. தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், நாட்டு கோழிக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பள்ளிபாளையத்தில் செய்யப்படும் நாட்டு கோழி கிரேவிக்கு என்று தனியாக அசைவ பிரியர்கள் கூட்டமே உண்டு. இந்த கோழி கிரேவியை வீட்டிலேயே சூப்பராக செய்யலாம்.

செய்முறை

நாட்டு கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.இதனுடன் மஞ்சள், மிளகாய், மல்லி பவுடரை சேர்த்து நறுக்கிய நாட்டு கோழி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, கோழி நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வரும் வரை வேக விடவும். இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை கிளறிக் கொள்ளவும்.இந்த கிரேவி சாம்பார், லெமன் சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். காரமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் -- -நமது நிருபர் --.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை