உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  உடல் ஆரோக்கியத்துக்கு ராகி டிரை புரூட் பால்

 உடல் ஆரோக்கியத்துக்கு ராகி டிரை புரூட் பால்

கேழ்வரகு உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் நல்லது. பெரும்பாலான வீடுகளில் இன்றைக்கும் கேழ்வரகு களி இருக்கும். கேழ்வரகு ரொட்டியும் செய்யலாம். ஆனால் குழந்தைகளுக்கு களியோ, ரொட்டியோ பிடிக்காது. இவர்களுக்கு ராகி டிரை புரூட் பால் செய்து கொடுத்தால் விரும்பி உண்பர். செய்முறை முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும். காய்ந்ததும், கேழ்வரகு மாவை போட்டு வறுக்கவும். நிறம் மாறிய பின் அடுப்பில் இருந்து இறக்கி, ஆற விடவும். தேவைப்பட்டால் கூடுதல் நெய் சேர்க்கலாம். இந்த கலவையில் பொடித்த சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும். இதில் சிறிதளவு நீர் சேர்த்து, பி சைந்து கொள்ளவும். அதன்பின் பால் சேர்த்து பிசையவும். நீரை விட, பால் அளவு அதிகமாக சேர்க்க வேண்டும். உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும் . இந்த மாவில் நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரிப்பருப்பு, பாதாம், திராட்சைகளை போட்டு கலந்து, சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டில் வைக்கவும். இதுவே 'ராகி ட்ரைபுரூட் பால்ஸ்'. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு திடீரென விருந்தாளிகள் வந்தால், சிறிது நேரத்தில் செய்து கொடுத்து அசத்தலாம். இனிப்பு விரும்பாதவர்கள், சர்க்கரை, வெல்லம் சேர்க்காமலும் கேழ்வரகு, முந்திரி, திராட்சை சேர்த்து பால் செய்யலாம்; அதிக நேரம் ஆகாது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை