உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / குட்டீஸ்கள் விரும்பும் ரவா ஸ்டிக்

குட்டீஸ்கள் விரும்பும் ரவா ஸ்டிக்

பலருக்கும் மாலை நேரம் காபி அல்லது டீயுடன் நொறுக்கு தீனி இருந்தால் மட்டுமே, அந்த நாள் முழுமையாகும். எப்போதும் ஒரே விதமான தின்பண்டமாக இருந்தால், போரடித்துவிடும். குறிப்பாக குட்டீஸ்களுக்கு தினமும் புதுப்புதுசிற்றுண்டி கேட்பர். தினமும் கடைகளில் வாங்கித் தருவதும் நல்லது அல்ல. சுகாதாரமற்ற தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து, சிறார்களின் உடல் ஆரோக்கியத்தை பாழாக்குவதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, ஆரோக்கியமான சிற்றுண்டி தயாரித்து கொடுக்கலாம். சில தின்பண்டங்களை தயாரிப்பது, மிகவும் எளிது. அதே போன்று மசாலா ஸ்டிக்கும் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என, பார்க்கலாமா? செய்முறை கறுப்பு முழு உளுந்தை கழுவி, நன்றாக வேக வைக்க வேண்டும். முந்தைய நாளே ஊற வைக்கலாம். வேக வைக்கும்போது உப்பு, மஞ்சள் துாள், 1 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்க்கவும். நன்றாக வெந்த பின், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, நான்கு ஸ்பூன் தயிர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். இது பேஸ்ட் போன்று இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம். ஒரு பாத்திரத்தில் ரவையுடன், வறுத்த சீரகம், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இதில் ஏற்கனவே பருப்பு கலவையை சேர்த்து பிசையவும். இதை 20 நிமிடம் மூடி வைக்கவும். அதன்பின் அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் மாவை சிறிது, சிறிதாக எடுத்து ஸ்டிக் போன்று செய்து, எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், ரவா ஸ்டிக் தயார். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ