உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / பார்வையற்றோரின் ஒளிவிளக்கு காயத்ரி நாராயணன்

பார்வையற்றோரின் ஒளிவிளக்கு காயத்ரி நாராயணன்

இதனாலேயே கண் தானம் அதிகம் செய்யுங்கள் என்று, மத்திய, மாநில அரசுகள் மக்களை கேட்டுக் கொள்கின்றன. கண் தானம் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சமூக ஆர்வலர்களும், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். இவர்களில் ஒருவரான காயத்ரி நாராயணன், துமகூரு மாவட்டத்தின் மதுகிரி நகரை சேர்ந்தவர். கண் தானம், உடல் உறுப்பு தானம் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். கர்நாடகா - ஆந்திரா மாநில எல்லையில் துமகூரு மாவட்டம் இருப்பதால், துமகூரு மட்டுமின்றி ஆந்திராவின் அனந்தபூர், ஹிந்துபூர், மடகஷிரா பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து காயத்ரி நாராயணன் கூறியதாவது: மனிதன் இறந்து உடலை அடக்கம் செய்த பின், கண்களை மண் தான் சாப்பிடுகிறது. அதுவே கண் தானம் செய்தால், வேறு யாருக்காவது பார்வை கிடைக்கும். நான் இறந்த பின், எனது கண்களை தானமாக எடுத்துக் கொள்ள எழுதிக் கொடுத்துள்ளேன். இதுவரை இறந்தவர்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட கண்களை சேகரித்து, பல கண் மருத்துவமனைகளுக்கு கொடுத்துள்ளேன். இதன்மூலம் பலரின் வாழ்க்கையில் ஒளி கிடைத்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தான் படித்துள்ளேன்; மேற்கொண்டு படிக்க முடியவில்லை. ஆனாலும் மக்களுக்காக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பதால், சமூக சேவையை கையில் எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை