உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  கோவாவில் அயர்ன்மேன் போட்டி முதன் முதலில் சாதித்த பெங்., வாலிபர்

 கோவாவில் அயர்ன்மேன் போட்டி முதன் முதலில் சாதித்த பெங்., வாலிபர்

: கோவாவில் சமீபத்தில் நடந்த அயர்ன்மேன் 70.3 டிரைத்லான் பந்தயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பெங்களூரு தெற்கு பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர்களை போன்று அயர்ன்மேன் போட்டியில், பெங்களூரு வாலிபரும் சாதித்து உள்ளார். உடுப்பியின் முண்டகூரை சேர்ந்த சிவசங்கர் பிரபு, சுபலட்சுமி தம்பதி மகன் சீனிவாஸ் பிரபு, 26. ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்கள் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கின்றனர். கோவாவில் நடந்த அயர்ன்மேன் 70.3 டிரையலத்லான் பந்தயத்தில் முதல் முறையாக கலந்து கொண்ட சீனிவாஸ் பிரபு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்ட போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தினார். இதற்கு முன்பு ஒலிம்பிக் டிரையத்லான், ஸ்பிரிண்ட் டிரையத்லான் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். அயர்ன்மேன் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து, சீனிவாஸ் பிரபு கூறுகையில், ''முதல் முயற்சிலேயே அயர்ன்மேன் டிரையத்லான் போட்டிகளில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சில ஆண்டுகளாக இப்போட்டிக்காக தயாராகி வந்தேன். ஒலிம்பிக், ஸ்பிரிண்ட் டிரையத்லான் போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று உள்ளேன். உலகின் மிக சவாலான போட்டிகளில் ஒன்றாக அயர்மேன் 70.3 க்கு சமீப ஆண்டுகளாக நல்ல வரவேற்பு உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பது உடல் வலிமைக்காக மட்டுமல்ல. மன வலிமை, ஒழுக்கத்தையும் கற்று கொள்ள முடியும்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி