உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / பேஷன் / பெண்களே... ஜீன்ஸ் தேர்வுக்கான அல்டிமேட் கைடு இங்கே!

பெண்களே... ஜீன்ஸ் தேர்வுக்கான அல்டிமேட் கைடு இங்கே!

ஒரு நல்ல ஜீன்ஸ் உறுதியாக, உடலை அணைத்தபடி இருக்கும். அதில் பல ஸ்டைல்கள், ஃபிட்கள் உண்டு. அவ்வப்போது புதிய ஸ்டைல்கள் வருவதால், எதை வாங்குவது என்பதில் சிறிது குழப்பம் ஏற்படும். உங்கள் ஜீன்ஸ் தேர்வை எளிதாக்க உதவும் வழிகாட்டி இங்கே உள்ளது.உடல் வாகிற்கு ஏற்ப நான்கு ஜீன்ஸ் வகைகள் உண்டு. அவை ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்கின்னி பிட்

இந்த ஸ்டைல் ஜீன்ஸ் தொடையுடன் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும். பலவிதமான டாப்ஸ் மற்றும் ஷூக்களுடன் இந்த ஸ்கின்னி பிட் ஜீனை மேட்ச் செய்யலாம். வெள்ளை சட்டையுடன் ஸ்கின்னி ஜீன் அணிந்தால் கவரும் வகையில் தோற்றமளிப்பீர்கள். கருப்பு க்ராப் டாப்பும் இதனுடன் பொருந்தும். ஸ்கின்னி பிட் அனைத்து உடல் வாகிற்கும் சிறப்பாக இருக்கும்.

ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட்

ஸ்கின்னி ஜீன்ஸ் தேவையில்லை என்பவர்களுக்கு ஏற்றது இந்த ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட். இந்த வகை டெனிம்கள் இடுப்பிலிருந்து விளிம்பு வரை நேராக இருக்கும். கேஷுவலான தோற்றத்திற்கு இவை சிறந்தவை. அலுவலகத்திற்கு இது ஒரு நல்ல தேர்வு. ஒல்லியான கால்கள் இருக்கும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் லுக்கையே மாற்றும்.

ரிலாக்ஸ்டு ஃபிட்

இது வழக்கமான ஜீன்ஸ்களை விட தளர்வாக இருக்கும், அதற்காக தொளதொளவென்று தெரியாது. சௌகரியமாக உணர வைக்கும். கோடைகாலத்திற்கு ஏற்றவை. சமீபத்தில் இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த வகை ஜீன்ஸ் அனைத்து உடல் வகைகளுக்கும் ஏற்றது. உங்களைப் பெரிதுப்படுத்திக் காட்டாது.

பூட்கட்

இந்த வகை ஜீன்ஸும் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரெட்ரோ ஜீன்ஸ் சாயலுடன் இருக்கும் இந்த ஜீன்ஸ் பேரிக்காய் வடிவ உடல்களைக் கொண்டவர்களுக்கு ஏற்றது. இதன் விரிந்த கீழ் பாதி இடுப்பு அளவுடன் சமனாக அமைந்து உயரமாக தோன்ற வைக்கும்.

ஜீன்ஸின் ரைஸ் (Rise) வகைகள்!

லோ ரைஸ் (Low Rise) ஜீன்ஸ்இது தொப்புளுக்கு 2 இன்ச் கீழே உட்காரும். மெலிந்த உடல்வாகு உள்ளவர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.மிட்-ரைஸ் (Mid Rise)ஏறக்குறைய அனைத்து உடல் வகைகளுக்கும் இது வசதியாக இருக்கும். இதுவும் தொப்புளுக்கு சற்று கீழே பொருந்தும். உருவத்திற்கு ஏற்ற வகையில் இது அமைந்துகொள்ளும்.ஹை ரைஸ் (High Rise)ஒல்லியான இடுப்பு கொண்ட பெண்களுக்கு இது உதவும். தொப்புளுக்கு 2 இன்ச் மேலே இது உட்காரும். இடுப்பு வளைவில் பொருந்தி எடுப்பான தோற்றத்தை அளிக்கும்.

சரியான ஜீன்ஸை ஆன்லைனில் வாங்குவது எப்படி?

அளவு பெரும்பாலோர் இடுப்பு அளவை மட்டும் அளவிட்டுக் கொண்டு ஜீன்ஸை ஆர்டர் போட்டுவிடுகிறோம். அப்படி இல்லாமல், பொருத்தமான ஜீன்ஸை வாங்க, தொடை, இடுப்பு மற்றும் இன்சீம் நீளம் ஆகியவற்றை அளவிட்டு, பிராண்டின் இணையதளத்தில் உள்ள அட்டவனையுடன் தொடர்புப்படுத்தி ஆர்டர் போடுங்கள். துணி வகைபெரும்பாலான டெனிம் ஜீன்ஸ் பருத்தி நூல்களில் இருந்து ட்வில் நெசவில் தயாரிக்கப்படுகிறது. மார்கெட்டில் கிடைப்பவை பருத்தி மற்றும் லைக்ராவின் கலவையாக இருக்கும். அதிகளவு பருத்தி, குறைந்தளவு லைக்ரா இருக்கும் ஜீன்ஸ் வாங்குங்கள். அவை வியர்வையை உறிஞ்சும்.

ஜீன்ஸை எவ்வாறு பராமரிப்பது?

அதிகம் பேசப்படாத ஆனால் அவசியம் அறிய வேண்டிய தலைப்பு. ஜீன்ஸை முறையாக பராமரித்தால் நைந்து போகாது. ஒரு ஜீன்ஸை 2 முறை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மார்கெட்டிங் போன்ற வெளியில் அலையும் நபர்களுக்கு இது பொருந்தாது. குளிர்ந்த நீரைப் பயன்படுத்தித் துவைக்க வேண்டும். அதனால் துணியின் நிறம் மங்காது. சுருக்கமடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை