உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சிக்கமகளூரு ரயில்வே பாலம்

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சிக்கமகளூரு ரயில்வே பாலம்

சிக்கமகளூரு என்ற பெயரை கேட்டாலே, பசுமையான காபி தோட்டங்கள், உயரமான மலைகள், அடர்த்தியான வனங்கள், அற்புதமான நீர்வீழ்ச்சிகள் கண் முன்னே வந்து செல்லும். இங்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், மலைகள், நீர்வீழ்ச்சிகளை ரசித்து செல்கின்றனர். இவை தவிர இவர்கள் பார்த்திராத இடமும், சிக்கமகளூரில் உள்ளது. இந்திய ரயில்வே துறை, பல்வேறு இடங்களில் அழகான ரயில்வே பாலங்களை கட்டியுள்ளது. கோவாவின் துாத் சாகர் வாட்டர் பால்ஸ் ரயில்வே மேம்பாலம், கர்நாடகாவின் சக்லேஸ்புரா - குக்கே சுப்ரமண்யா இடையே உள்ள ரயில்வே பாலம் மிகவும் அழகான பாலங்கள். இதே போன்ற சூப்பர் ரயில்வே பாலம், சிக்கமகளூரி லும் உள்ளது. இது சிறந்த சுற்றுலா தலமாகும். சிக்கமகளூரு நகரின், லக்யா கிராமத்தில், சிக்கமகளூரு - கடூரு ரயில் பாதையில் உள்ள ரயில் பாலத்தின் சிறப்பு குறித்து, பலருக்கும் தெரியாது. பாலம் மீது நின்று பார்த்தால், ஒரு நொடி இதை கட்டியது யார் என்ற ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. பாலத்தின் இர ண்டு பக்கங்களிலும், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பச்சை பசேலென பசுமையான வயல், தோட்டங்கள், தென்படுகின்றன. இந்த பாலத்தின் மீது, ரயிலில் பயணம் செய்வதும் அற்புதமான அனுபவமாக இருக்கும். 2 கி.மீ., நீளமான ரயில்வே பாலம், 13 துாண்கள் கொண்டுள்ளதாகும். சிக்கமகளூருக்கு செல்லும் சுற்றுலா பயணியர், இந்த பாலத்தை காண மறக்காதீர்கள். அழகான இடங்களை காண விரும்பினால் கஷ்டப்பட வேண்டு ம். லக்யா கிராமத்தில் உள்ள ரயில்வே பாலத்தை பார்க்க, 3 - 4 கி.மீ., மண் சாலை, கரடுமுரடான சாலையை கடக்க வேண்டும். அங்கிருந்து 300 அடி நடந்தால், அழகான லக்யா ரயில்வே மேம்பாலத்தை காணலாம்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து, 241 கி.மீ., மைசூரில் இருந்து 171 கி.மீ., மங்களூரில் இருந்து 148 கி.மீ., தொலைவில், சிக்கமகளூரு உள்ளது. சிக்கமகளூரில் இருந்து, 21 கி.மீ., துாரத்தில், லக்யா கிராமம் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாடகை வாகன வசதியும் உள்ளது. சிக்கமகளூருக்கு சுற்றுலா செல்வோர், வாடகை வாகனங்களில் லக்யா கிராமத்துக்கு சென்று, ரயில்வே பாலத்தை காணலாம். இப்பகுதியில் தேனீக்கள் அதிகம் உள்ளன. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை