அடி குத்து என கைகலப்பில் முடிந்த டிவி விவாதம்: வீடியோ!
பாகிஸ்தானில் செய்தி சேனல் ஒன்றின் நேரலை விவாதத்தில் பங்கேற்ற நவாஸ் கட்சி மற்றும் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் விவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. செய்திச் சேனல்கள் 24 மணி நேரம் ஆகி, மக்களுக்கு செய்திகளை பார்த்து பார்த்து சலிப்பு ஏற்பட்டு போனதால், ஒரு செய்தியின், சம்பவத்தின் இரு தரப்பு வாதங்களை உருவாக்கும் வகையில் விவாத நிகழ்ச்சிகள் உருவாகின. அதனை தொகுத்த தொகுப்பாளர்கள், பங்கேற்கும் விருந்தினர்கள் போன்றவர்களால் அது போன்ற நிகழ்ச்சிகள் பல வெற்றி பெற்றன. இன்று முளைக்கும் புதிய யுடியூப் சேனல் முதற்கொண்டு அதே பார்முலாவை பின்பற்றுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tgqly0x4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் சில சமயங்களில் நடக்கும் சம்பவங்கள் வைரலாகும். அது போன்ற ஒரு சம்பவம் தான் பாகிஸ்தானில் நடந்துள்ளது. ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கட்சியைச் சேர்ந்த ஷேர் அப்சல் கான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் அப்னன் உல்லா கான் ஆகிய இருவர் பங்கேற்றனர்.விவாதம் காரசாரமாக சென்று கொண்டிருக்கையில், அப்னன் உல்லா கான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானை தரக்குறைவாக விமர்சிக்க துவங்கினார். வெகுண்டு எழுந்த ஷேர் அப்சல் கான், பளார் என அப்னன் உல்லா தலையில் ஒரு போடு போட்டார். பதிலுக்கு அவர் இவரை தாக்க, இவர் அவருக்கு குத்து விட, இப்படி கட்சியினர் நடந்து கொள்வார்களா என்று அந்த வீடியோ வைரலாகி வருகிறது.