/ டெக்னாலஜி / வருங்கால தொழில்நுட்பம் / இது ஏஐ சீஸன்; சாட் ஜிபிடி, ஆப்பிள், கூகுளைத் தொடர்ந்து ஏஐ கோதாவில் குதிக்கும் மெட்டா..!
இது ஏஐ சீஸன்; சாட் ஜிபிடி, ஆப்பிள், கூகுளைத் தொடர்ந்து ஏஐ கோதாவில் குதிக்கும் மெட்டா..!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்போது நாளுக்குநாள் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்க பிரபல உலகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியில் தற்போது அமெரிக்க தொழிலதிபர் மார்க் சக்கர்பெர்கின் மெட்டா நிறுவனமும் குதித்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் தற்போது உலக தொழில்நுட்ப சந்தையை மாற்றியமைத்து வருகிறது. இது மனிதர்களின் மொழி நடையிலேயே கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உரையை மொழிபெயர்க்க சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தலாம். பயனாளர்கள் வெவ்வேறு மொழிகளில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை சாட் ஜிபிடி எளிதாக்குகிறது.