உள்ளூர் செய்திகள்

/ டெக்னாலஜி / வருங்கால தொழில்நுட்பம் / அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் ரோபோக்களை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பம்..!

அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் ரோபோக்களை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பம்..!

ரோபோ தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நிலவு உள்ளிட்டவற்றுக்கு நாசா, ராஸ்காஸ்மாஸ், இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ரோபோக்களை அனுப்பி சோதனை செய்து வருகின்றன. விண்வெளி வீரர்களால் தாங்கமுடியாத காலநிலையை ரோபோக்கள் தாங்கும் திறன் கொண்டவை. மேலும் இவற்றின் சோதனை முடிவுகள் மிகத் துல்லியமாக இருக்கும். விண்வெளி ரோபோக்கள் பல ஆண்டுகால ஆராய்ச்சியில் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்துள்ளன. சோவியத் யூனியனின் லூனா புரோக்ராம், நாசாவின் ரேஞ்சர் மிஷன் ஆகியவை ரோபோக்களை அதிகம் பயன்படுத்தியுள்ளன.

1970-களில் வாயேஜர் 1 மற்றும் 2 மிஷன்களில் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் விண்வெளி குறித்த அரிய தகவல்களை மனித இனத்துக்கு அனுப்பியது. இதன்தொடர்ச்சியாக நாசா பல ரோபோ மிஷன்களைச் செய்துள்ளது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களுடன் இணைந்து விண்ணுக்குச் செல்லும் தொழில்நுட்பம் உருவாக்கப்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆபத்தான இடங்களுக்கு முதலில் ரோபோவை அனுப்பி பின்னர் அது பாதுகாப்பான இடம் என உறுதியானதும் விண்வெளி வீரர்கள் அங்கு செல்வர். எனவே எதிர்கால செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மனிதர்களுடன் ரோபோக்கள் முக்கிய அங்கம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை