நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஷீல்டு பிரிப்பு வெற்றிகரமாக நடைபெறுமா?
அமெரிக்க விஞ்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த 2021 ஆம் ஆண்டு டிச.,25 ஆம் தேதி அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் ஏவியது. 9.7 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி மனிதனின் வியத்தகு கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது ஜேம்ஸ் தொலைநோக்கி சூரிய ஒளிக்கதிர்களால் பாதிக்கப்படாமல் இருக்க அதனுடன் இணைக்கப்பட்ட தெர்மல் கண்ட்ரோல் சிஸ்டம் நீக்கப்படும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து அறிந்துகொள்வோம். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரிய ஒளியால் பாதிக்கப்படாமல் இருக்க ஷீல்டுகள் பொருத்தப்பட்டன. கேப்டான் மெம்ப்ரேனில் அலுமினியம் கோட் செய்யப்பட்ட ஐந்து ஷீல்டுகள் துணிபோல மெலியதாக இருக்கும். 69 × 46 அடி என்னும் அளவில் உள்ள இவை தொலைநோக்கிக்கு சூரியனில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முன்னதாக ராக்கெட் கொண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டுக்களில் இந்த ஷீல்டுகளை விரித்து வைத்து எடுத்துச் செல்லமுடியாது. எனவே இவை மடித்து எடுத்துச் செல்லப்பட்டன.