விவசாயிகளை வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட்அப் செயலி!
கிசான்கனெக்ட் எனும் ஸ்டார்ட்அப் 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதில் தற்போது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி முதலீடு செய்துள்ளார். இந்த செயலி விளைபொருட்களை உற்பத்தி செய்யும் 5 ஆயிரம் விவசாயிகளையும், மும்பை, புனேவைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளரையும் இணைக்கிறது. இதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்கின்றனர்.கிசான்கனெக்ட் நோக்கம் குறித்து அதன் சி.இ.ஓ., விவேக் நிர்மல் கூறுகையில், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருட்கள் வீணாவதை குறைத்து, தரமானவற்றை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்க உதவுவது தான் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியில் கிசான் டிரேஸ் (Kisan Trace) என்ற வசதி தரப்பட்டுள்ளது. அதன் மூலம் நுகர்வோர் பெறும் காய்கறிகள், பழங்கள் எந்த பண்ணையில் இருந்து வருகிறது. அந்தப் பண்ணையின் விவசாய நடைமுறைகள் என முழுத் தகவலையும் நுகர்வோருக்கு வழங்குகிறது. இது விளைபொருளின் தரம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் என்கின்றனர்.