உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / ஆசிய வில் வித்தைப் போட்டி; அரையிறுதிக்குத் தகுதிபெற்ற இந்திய வீராங்கனைகள்..!

ஆசிய வில் வித்தைப் போட்டி; அரையிறுதிக்குத் தகுதிபெற்ற இந்திய வீராங்கனைகள்..!

சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் இந்தியா, சீனா, நேபாளம், ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஹாங்காங் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கப் பதக்கம், வூஷு விளையாட்டில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலப் பதங்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.வில் வித்தைப் போட்டியில் அரை இறுதிச் சுற்றுக்கு இரு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி, அதிதி ஆகி வீராங்கனைகள் 704 மற்றும் 696 புள்ளிகள் பெற்றனர். காம்பவுண்ட் போட்டியில் மொத்தம் 2087 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த வீராங்கனைகள் அரை இறுதியில் வென்று இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றால் அது இந்திய வில் வித்தை கலைக்கு ஓர் மைல்கல்லாக அமையும். ஏற்கனவே வட இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பல சர்வதேச வில் வித்தைப் போட்டிகளில் பல பதக்கங்களைக் குவித்துள்ளார். துரோணாச்சாரியார் துவங்கி அர்ஜுனன்வரை பாரத இதிகாச புராணங்களில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய வீரர் கதாபாத்திரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். வில் அம்பு கொண்டு வேட்டையாடும் கலை உலகின் பல நாகரிகங்களில் இருந்தபோதும் இந்திய வில் வித்தை அதில் எப்போதும் தனித்தன்மை பெற்று உள்ளது. கிரிக்கெட், செஸ், கேரம், ஹாக்கி, டென்னிஸ், நீச்சல் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்துவிடுவதுபோல வில் வித்தை வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துவிட இன்றைய பெற்றோர் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் நமது பாரம்பரிய கலையான வில் வித்தையில் இந்திய வீரர்கள் பல பதக்கங்களைத் தட்டிச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை