உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / தேள் கடிக்கான அத்தியாவசிய முதலுதவி!

தேள் கடிக்கான அத்தியாவசிய முதலுதவி!

தேள், நண்டு உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களின் நஞ்சு மிகவும் ஆபத்தானது. தேள் கடித்துவிட்டால் கடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் மேற்கொள்ளும் முதலுதவி என்னென்ன, அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுமெனப் பார்ப்போமா?தேள் கடித்தவர் எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும். எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இவை அனைத்தும் தற்காலிக முதலுதவிகள்தான், நிரந்தரத் தீர்வல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மருத்துவனையில் முதலில் தேள் கடித்த இடத்தில் அதன் பல் துகள் சிக்கியிருந்தால் அது பாதுகாப்பாக தோல் பகுதியிலிருந்து அகற்றப்படும். பின்னர் உடலில் தேள் கடித்த இடம் வெந்நீரில் நனைக்கப்படும். காயம் பட்ட இடம் பஞ்சு, டிஞ்சர் கொண்டு சுத்தம் செய்யப்படும். இதனால் புண்ணில் உள்ள ஓவ்வாமை நீங்கும். டெடனஸ் ஊசி, விஷ முறிவு ஊசி மற்றும் அண்டிபயாட்டிக் மருந்துகள் மருத்துவரால் கொடுக்கப்படும். தேள் கடியால் நரம்பு அல்லது எலும்புக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை