ஆறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் ! மணவூர் கந்தசுவாமி கோயில் | Lordmuruga | Thiruthanitemple | Kandaswam
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு அருகே மணவூர் என்ற கிராமத்தில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கந்தசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் வாகனம் யானை. சூரசம்ஹாரத்துக்கு முன்பே இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மயில் வாகனம் அதன் பிறகே வந்துள்ளது. வள்ளி மற்றும் தேவசேனாவுக்கு இங்கு சன்னதிகள் இல்லை. கோயிலின் அடிவாரத்தில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 9ம் நூண்றாண்டை சேர்ந்த இந்த கோயிலில் ஒருகால பூஜை நடக்கிறது. ஆடித்திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் பிரம்மாவுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். இதன் காரணமாக முருகன் பிரம்ம சாஸ்தா என அழைக்கப்படுகிறார். மணவூர் கோயிலில் இந்த வடிவத்திலும் முருகனை காணலாம்.