உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அன்ன வாகனத்தில் குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி

அன்ன வாகனத்தில் குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி

தென்திருப்பதியான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா- அன்ன வாகனத்தில் வீதிஉலா திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் வைணவ கோவில்களில் பிரசித்திபெற்றதாகும்.திருப்பதிக்கு சென்று வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோவிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசிமாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவம் தேர்திருவிழா இன்று காலை (04 ம் தேதியன்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் முதல் நாளான இன்றையதினம் பிரசன்ன வெங்கடாஜலபதி அன்ன வாகனத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் காட்சியளித்தார். கும்ப தீபாராதனைக்குப் பிறகு வெளிபிரகாரங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சவர் வீதிஉலாவந்து சேவைசாதித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து தினசரி உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதிஉலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12- ம்தேதி நடைபெறுகிறது.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை