பன்னாடை என்றால் என்ன தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சிலரைத் திட்டும் போது போடா பன்னாடை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பன்னாடை என்றால் என்ன தெரியுமா? மக்களுக்கு இக்காலத்தில் எந்தளவுக்கு நல்லதைக் கற்றுத்தர வந்துள்ளதோ, அதே அளவுக்கு கெட்டதையும் கற்றுத்தருகிறது இணையதளம். அன்னப்பறவை பாலிலுள்ள தண்ணீரை பிரித்தெடுத்து சுத்தமான பாலைப் பருகுவது போல, நல்லதைத் தேர்ந்தெடுத்து படித்தால், வாழ்வுக்கு நன்மையாக இருக்கும். பன்னாடை என்றால் வெள்ளைத்துணி. அதில் தண்ணீர், எண்ணெய் முதலானவற்றை ஊற்றி வடிகட்டினால், அழுக்கை தக்க வைத்துக் கொண்டு சுத்தமானதை வெளியேற்றும். இணையதளம் பார்ப்பவர்கள் அழுக்கை தக்க வைக்கும் பன்னாடையாக இருக்கக் கூடாது. நல்லதைப் பிரித்தெடுத்து உண்ணும் அன்னம் போல் இருக்க வேண்டும். இனியாவது, இணைய தளங்களில் பக்திப் பாடல்கள், தெய்வங்களின் மகிமை, புராண வரலாறு, மகான்களின் கதை என தேர்வு செய்து படியுங்கள். மனமும், உடலும் சுத்தமாக இருக்கும்.