அதிகார நந்திக்கு பூஜை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சிவாலயத்தில் காளை வடிவ நந்தியைப் பார்த்திருப்பீர்கள். பிரதோஷத்தன்று, இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். பல சிவாலயங்களில் மனித வடிவிலுள்ள அதிகார நந்தியும் இருக்கும். இவருக்கும் பிரதோஷத்தன்று பூஜை செய்ய வேண்டும். காளை வடிவ நந்தியின் மூல அவதாரமாக இவரைக் கருதலாம். சிவன் சன்னதி முன்புள்ள மகாமண்டப நுழைவுப்பகுதியில் அதிகார நந்தி வடக்கு நோக்கி இருப்பார். இவரையடுத்து, சூரியனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்திருப்பர். அதிகார நந்தியை இரண்டாம் ஈஸ்வரன் என்பர். எப்போது சிவாலயம் சென்றாலும், இவரை வணங்கி, சிவன் சன்னதி செல்ல அனுமதி வேண்டும் என்று சொல்லிவிட்டு சன்னதிக்குள் நுழைய வேண்டும். இந்த அதிகாரத்தை சிவனே இவருக்கு வழங்கியுள்ளதால் தான் அதிகார நந்தி என்று பெயர் பெற்றுள்ளார்.
ஜூலை 09, 2024