விபத்தில்லா பயண மந்திரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
விபத்தில்லா பயண மந்திரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar பத்திரம் என்றால் மங்கலம், மலர், இலை, பாதுகாப்பு, உரிமை என்று பொருள்கள் உண்டு. ஒரு சொத்து இன்னாருடையது என்று உரிமைப்படுத்த பத்திரம் எழுதுகிறோம். நியாயமாக நமக்கு சேர வேண்டிய சொத்துக்களில் பிரச்னை இருந்தால், காளியிடம் அதைச் சொல்லி உரிமையைப் பெறலாம். பெண்களுக்கு மங்கல வாழ்வை அவள் தருவாள். வீட்டில் இருந்து வெளியில் செல்பவரை பத்திரமாக போய் வா என்போம். இதனால் அவள் பாதுகாப்பை வழங்குகிறாள். தன்னை நம்பும் பக்தர்கள் மீது, அவள் கோரமாக காட்சி தராமல் மலர் போலும் இலை போலும் மெல்லிய பார்வையைச் செலுத்துவாள். இதனால் தான் காளியை பத்திரகாளி என்கிறார்கள். நம்மைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்பவள் இவள். காளி வழிபாடு விபத்தின்றி பாதுகாப்பான பயணம் செய்ய பயன்படும். வேலை, கல்விக்கூடங்களுக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மாசன வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரயோசதயாத் என்ற மந்திரத்தை தினமும் நான்கு முறை சொல்லி விட்டு பணி மற்றும் பயணம் செல்ல வேண்டும். அமாவாசை, திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமையில் சொல்லத் துவங்குவது இரட்டிப்பு பலன் தரும்.