4,7 இந்த எண்களின் சிறப்பு என்ன? | | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ராகுவுக்குரிய எண் 4. இதற்குரிய தெய்வம் துர்க்கை. இதனால் தான் 22 ஸ்லோகங்கள் (கூட்டினால் 4)கொண்ட அர்ச்சனையைக் காளிக்கு செய்வார்கள். கேதுவுக்குரிய எண் 7. இவருக்குரிய தெய்வம் விநாயகர். எனவே ஏழுமுறை ஓம் சக்தி விநாயக நமஹ மந்திரத்தைச் சொல்லி விட்டு, நான்கு முறை ஓம் காள்யை நமஹ என்று துவங்கும் 22 ஸ்லோக மந்திரத்தைச் சொல்வார்கள். திருமணத்துக்குப் பிறகு நாகதோஷம் இருப்பதாக தெரிய வந்தால், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்க்கை கோயில்கள் அல்லது பெரிய கோவில்களிலுள்ள துர்க்கை அல்லது காளி சன்னதிகளில் அமர்ந்து இந்த மந்திரத்தைச் சொன்னால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை துர்க்கைக்கு அணிவிப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் வேண்டிக் கொள்ள நாகதோஷம் அகலும்.