உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / 18 புராணங்கள்-பயோடேட்டா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

18 புராணங்கள்-பயோடேட்டா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

புரா என்றால் பழமையான என பொருள். தெய்வங்களின் பழமையான வரலாற்றைத் தெரிவிப்பது. இதோ...18 புராணங்கள் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது. விஷ்ணு புராணம்- பெருமாள் வரலாறு பாகவதம்- கண்ணன் வரலாறு நாரத புராணம்- நாரதர் வரலாறு பத்ம புராணம்- காயத்ரி வரலாறு, கற்பின் சிறப்பு வராக புராணம்- திருமாலின் அவதார மகிமை, அன்னதானத்தின் சிறப்பு பிரம்ம புராணம்- பிரம்மாவின் வரலாறு பிரம்மாண்ட புராணம்- பிரம்மாவால் படைக்கப்பட்ட அதிசயங்கள் பற்றிய தொகுப்பு பிரம்ம வைவர்த்த புராணம்-கிருஷ்ணரை பிரம்மாவாக (படைப்புக்கடவுள்) சொல்லும் நுõல் பவிஷ்ய புராணம்-கலியுகத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்கள், பெருமாள் கல்கி அவதாரம் எடுக்கப்போகும் முன்னறிவிப்பு வாமன புராணம்- பெருமாளின் வாமன அவதாரக் கதை சிவபுராணம்- சிவன் வரலாறு லிங்க புராணம்- லிங்க வழிபாட்டு முறை, திருநீற்றின் மகிமை கந்தமகா புராணம்- முருகன் வரலாறு மார்க்கண்ட புராணம்- அத்திரி, அனுசூயா வரலாறு, மார்க்கண்டேயரால் ஜைமினி முனிவருக்கு சொல்லப்பட்ட கதை தொகுப்பு அக்னி புராணம்- அக்னி பகவான் வரலாறு மச்ச புராணம்- விரதங்கள், தானங்கள், பிதுர் காரியம் பற்றிய தொகுப்பு கூர்ம புராணம்- பெருமாளின் கூர்மாவதார(ஆமை) கதை, ஆசையால் வரும் துன்பம் கருட புராணம்- இறப்புக்குப் பின் உயிர்களுக்கு என்னாகும் என்ற விபரம்.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை