பத்து ரூபாய்க்கு லட்சம் தங்கப்பூ | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தங்கம் விற்கிற விலையில், பத்து ரூபாய்க்கு யாராவது லட்சம் தங்கப் பூக்கள் தருவார்களே! ஒரு கிராமே ஏழாயிரத்தை எட்டி விட்ட நிலையில், இதென்ன புதுக்கதையாக இருக்கிறது என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்! இது நிஜமான தகவல். நீங்கள் சிவன் கோவிலுக்கு செல்லும் போது, வாசலில் விற்கும் வில்வமாலைகளை வாங்குங்கள். ஒரு வில்வ தளம் மூன்று இலைகளைக் கொண்டதாக இருக்கும். இவ்வாறு மூன்று இலைகளைக் கொண்ட ஒரு வில்வதளத்தை சிவனுக்கு அர்ச்சித்தால், லட்சம் தங்கப்பூக்களால் அர்ச்சித்த பலன் கிடைக்கும். பத்து ரூபாய் மாலையில் குறைந்தது 20 வில்வத் தளங்கள் இருக்கலாம். இதை சிவனுக்கு அணிவித்தால், 20 லட்சம் தங்கப்பூக்களால் அர்ச்சித்த பலன் எளிதாக கிடைத்து விடுகிறது. ஜாதிமல்லி பூவுக்கும் இத்தகைய பலன்
ஜூலை 22, 2024