பிள்ளைகளைக் காக்கும் பிட்டாபுரத்தாள் | | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பிட்டா என்பது ஒரு வகை தோஷம். உடல், மனதில் இந்த தோஷம் மாற்றங்களை ஏற்படுத்தும். பித்தம் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் நோயையும் பிட்டா என்று குறிப்பிடுவர். குழந்தைகளுக்கு பித்தமும், வெப்பமும் அதிகமானால் 64 வகை சீர்க்குணங்கள் எனப்படும் வாந்தி, பேதி அறிகுறிகள் இருக்கும். கண்கள் நிலைகுத்தி, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இப்படி ஆபத்தான கட்டத்திற்கு குழந்தைகள் போனால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பிட்டாபுரத்து அம்மனை நினையுங்கள். இந்த அம்பாள், திருநெல்வேலி டவுன் லாலாசத்திர முக்கில் இருந்து ஜங்ஷன் திரும்பும் வழியை ஒட்டிய சாலையில் உள்ள கோவிலில் அருள்பாலிக்கிறாள். பிட்டாபுரத்து அம்மன் எனப்படும் இவளை பேச்க வழக்கில் புட்டார்த்தி அம்மன் என்பர். இவளுக்கு புட்டு நைவேத்யம் செய்யப்படும் என்பதால், புட்டார்த்தி என பெயர் வந்தது என்பர். நோயுற்ற குழந்தைகளையும், பிறந்த குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்கவும் தினமும் இந்தக் கோவிலில், குழந்தைகளுக்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மதியம் மற்றும் இரவு பூஜையின் போது தெளிக்கப்படும். செவ்வாய்,ö வள்ளியில் அதிக கூட்டம் இருக்கும். ஆறு அடி உயரமுள்ள இந்த அம்மன், நெல்லை மக்களின் காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள்.