மணலை சோறாக்கிய கற்புக்கரசி | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மணலை சோறாக்கிய கற்புக்கரசி இக்காலத்தில், பெண் பார்க்க செல்வது என்பது மிக சாதாரணம். அக்காலத்தில், தாலி கட்டும் வரை தான் மணக்கப்போகும் பெண்ணின் முகம் மணமகனுக்கு தெரியாது. பெண்ணுக்கும், இதே நிலை தான். தாலி கட்டும் போது கூட தலை குனிந்தே இருப்பாள். பெண்கள் மிகவும் வெட்கப்பட்ட காலம் மட்டுமல்ல, பெற்றோருக்கு கட்டுப்பட்ட காலம் அது. பெற்றவர்கள் முடிவை தங்கள் முடிவாக மணமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அக்காலத்திலேயே பெண் பார்க்கச் சென்று புரட்சி செய்தவர் திருக்குறள் ஆசிரியரான திருவள்ளுவர். அவர், தன் மனைவியாகப் போகும் வாசுகியின் தந்தையிடம், “உங்கள் பெண்ணிடம் ஒரு பிடி மணலைக் கொடுங்கள். அதை சமைத்து சோறாக்கி விட்டால், இவளையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்,” என்றார். வாசுகியும் மணலை சமைத்து சோறாக்கி விட்டாள். அவளது கற்புத்திறன் மிகவும் அரியது என்பதை உணர்ந்த வள்ளுவர், அவளையே திருமணம் செய்து கொண்டார்.