உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / மகன் மடியில் அம்மா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

மகன் மடியில் அம்மா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாளை விநாயகர் சதுர்த்தி. இந்த நாளில் ஒரு அருமையான தத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள். இக்காலத்தில், பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகள் குறைவு. நம்மைப் பெற்றவர்களை தலைமேல்...உஹூம்..மடி மேல் துõக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்கிறார், விநாயகர். அம்மாவின் மடியில் பிள்ளை இருப்பது தான் உலக வழக்கம். ஆனால் பிள்ளையின் மடியில் அம்மா இருப்பது விசேஷம் தானே! ஆம், கன்னியாகுமரி மாõவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள நீலகண்ட விநாயகர், தன் மடியில் அன்னை பார்வதியை அன்புடன் அமர்த்தியுள்ளார். இங்கு வந்து இந்த அரிய காட்சியைப் பார்த்து, இனியேனும் பெற்றவர்களைக் கவனிக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுங்கள். இங்குள்ள உதய மார்த்தாண்ட விநாயகர், கோயில் பாதுகாவலராக உள்ளார். ஒரு துõணில் விநாயகர் பெண் வடிவமாகக் காட்சியளிக்கிறார். இவரை கணேசினி என்பர். இப்படி மூன்று வடிவங்களில் இங்கு அவர் காட்சியளிப்பது சிறப்பு. நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில் 5.கி.மீ., துõரத்தில் இவ்வூர் உள்ளது.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை