காலையில் சனி வழிபாடு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
காலையில் சனி வழிபாடு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar சனி கிரகம், உங்கள் ராசிக்கு 3,6,11 ஆகிய இடங்களில், கோட்சார ரீதியாக இருக்கும் போது மட்டுமே நன்மை தருவதாக இருக்கும். மற்ற இடங்களில் இருந்தால் பாதிப்பு ஓரளவோ, கடுமையாகவோ இருக்கும். இந்த சமயத்தில், சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால், பணி காரணமாக நேரம் கை கொடுக்காது. பொதுவாக இரவு நேரத்திலேயே, சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்கின்றனர். உண்மையில், இவருக்கு மாலை 6 மணிக்குள் அர்ச்சனை செய்தால் பலன் நன்றாக இருக்கும். காலையிலும் கோயிலுக்குப் போக முடியாதவர்கள் சனிக்கிழமை காலையில், சனீஸ்வரரை மனதில் நினைத்து,“நிலா போல் பிரகாசிப்பவரே! சாயாதேவி- சூரியனின் குமாரரே! எமனுக்கு மூத்தவரே! கடமை உணர்வின் நாயகரே! சனீஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்,” என சொல்லி வணங்க வேண்டும். ஆனால் தர்மசிந்தனை, வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம், மாற்றுத்திறனாளிகள் மீது பரிவு கொண்டவர்களுக்கே அவரது அருள் கிடைக்கும். சனீஸ்வரரை வணங்கும் முன், உங்கள் குலதெய்வம் அல்லது விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோரை மனதில் நினைத்து வணங்குங்கள்.