உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நாளைய அஷ்டமியில் நாய்க்கு முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாளைய அஷ்டமியில் நாய்க்கு முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாளைய அஷ்டமியில் நாய்க்கு முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar நாளை ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி. இந்நாளில், பைரவரின் வாகனமான நாய் முக்கியத்துவம் பெறும். வேதத்தின் வடிவமாக இது கருதப்படுகிறது. நாய் நன்றியுள்ள ஜீவன். காவல் காப்பதில் சிறந்தது. மோப்ப சக்தி கொண்டது. அக்காலத்தில் கோயிலைப் பூட்டி சாவியைப் பைரவரின் பாதத்தில் வைப்பார்கள். காரணம், கோயிலை விட்டு வெளியே செல்பவர்கள் ஏதாவது திருடியிருந்தால், அவரது நாய் கண்டுபிடித்து விடும் என்ற நம்பிக்கையினால் தான். இப்போது கூட, திருடர்களைப் பிடிக்க மோப்ப நாய்களை போலீசார் பயன்படுத்துகின்றனர். கோவிலில் திருடியவர்கள் வெளியே சென்ற பிறகு, சிவத்துரோகம் செய்து விட்டோமோ என மனம் படபடப்புடன் இருக்கும். நாயால் துரத்தப்படுவனுக்கு எப்படி மூச்சு வாங்குமோ, அதுபோன்ற பயஉணர்வு ஏற்படும். நாய் கடித்தால் விஷம் ஏறி மனிதன் இறந்து போகும் வாய்ப்புண்டு. கோயில் சொத்தை திருடியவனும் சட்டத்திடம் தப்பித்தாலும், வியாதி வந்து அவதிப்பட்டு இறப்பான். இந்த தண்டனையை பைரவரின் வாகனமும், உண்மையின் வடிவமுமான நாயே செய்து விடும்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி