உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஏகாதச அவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

ஏகாதச அவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

ஏகாதச அவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar இது ஓணத்திருவிழா வாரம். கேரளத்தில் மக்கள் இதை சிறப்பாகக் கொண்டாடுவர். திருமால் தசாவதாரம் எடுத்தார். ஆனால் ஒரே அவதாரத்தில் இரட்டை வடிவங்கள் காட்டியது வாமன அவதாரத்தில் மட்டுமே. வாமனராக இரண்டு அடி உயரத்தில் அவர் மகாபலியைச் சந்தித்தார். பிறகு அளவிட முடியாத உயரத்துக்கு திரிவிக்ரமராக எழுந்தருளினார். திரி என்றால் மூன்று. விக்ரமன் என்றால் அளவில்லாதவன். மூன்றடியில் உலகத்தையே அளந்தவர். மற்ற அவதாரங்களில் அசுரர்களை திருமால் கொன்று விட்டார். ஆனால் வாமன அவதாரத்தில் தன் திருவடியால் ஆட்கொண்டார். மூன்றடி நிலத்தைப் பெற்றாலும், பாதாள உலகத்தை மீண்டும் மகாபலிக்கே அளித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று, அவன் ஆட்சி செய்த மலைநாட்டு மக்களை பார்க்க வர அனுமதியளித்தார். ஆக, வாமனம், திரிவிக்ரமம் என்ற இரண்டு அவதாரங்களை ஒரே அவதாரத்தில் செய்து காட்டியதால், தசாவதாரத்தை ஏகாதச அவதாரம்...அதாவது பதினொரு அவதாரம் எடுத்தவர் விஷ்ணு என்று கூட சொல்லலாமோ!

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை