உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / விநாயகருக்கும் புரட்டாசியில் முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

விநாயகருக்கும் புரட்டாசியில் முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

விநாயகருக்கும் புரட்டாசியில் முக்கியத்துவம் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளின் நினைவு தான் பக்தர்களுக்கு வரும். புதன் கிரகத்துக்குரிய மாதம் இது. புதன் தோஷத்தால் சிரமப்படுவோர், இம்மாதத்தில் பெருமாளை வழிபடுவர். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் இது. கன்னி ராசியின் கிரகமும் புதனே. இந்த மாதத்தில் துõர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் என இரண்டு முக்கிய விரதங்கள் வரும். இவை இரண்டும் விநாயகருக்கு உரியவை. துõர்வம் என்றால் அருகம்புல். விநாயகருக்கு நாம் எந்தளவு மரியாதை செய்கிறோமோ, அந்தளவுக்கு அவருக்கு உகந்த அருகம்புல்லுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அருகம்புல் வளர்ந்துள்ள இடங்களில் தண்ணீர் பாய்ச்சலாம். அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு செய்தால், அறுகு போல் வேறுõன்றி நம் குடும்பத்தை யாராலும் எந்த விதத்திலும், அசைக்க முடியாத நிலை ஏற்படும். ஜேஷ்டா என்றால் மூத்தது என்றும், முன்னோடி என்றும் பொருள். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் விநாயகரைக் குறித்து விரதமிருந்து, அருகம்புல் மாலையிட்டு வழிபட்டால், நம் குடும்பம் மற்ற குடும்பங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் முன்னேறும்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ