உலகத்துக்கே இன்று நல்ல நாள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இன்று மகாளய பட்ச திரயோதசி திதி. பிரதோஷ நன்னாளும் கூட. இன்றைய தினம் முன்னோர் வழிபாடு நம் குடும்பத்துக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே நல்ல நாள். ஏனெனில், இன்று நம் முன்னோருக்கு கொடுக்கும் தர்ப்பணம் விவசாய அபிவிருத்தி மற்றும் பால் உற்பத்தி அதிகரிப்புக்கு வழி செய்யும். பசுக்கள் வளர்ப்போர் இந்நாளில் தர்ப்பணம் செய்தால், பசுக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகும். அது மட்டுமல்ல, ஆயுள் விருத்தி, நல்ல தேக ஆரோக்கியம் ஆகியவையும் கிடைக்கும். நோயற்ற வாழ்வே பெருஞ்செல்வம் என்ற சுலவடைக்குரிய நாள் இன்று. அது மட்டுமல்ல, வீடுகளில் கொலு வைக்கும் நாள் நெருங்கி வருவதால், பொம்மைகளை வெளியே எடுத்து, அவற்றை சுத்தம் செய்து வைக்கவும் உகந்த நாளாக இது விளங்குகிறது. இன்று காலையில் சூரிய பகவானையும், மாலையில் விவசாயிகளின் தெய்வமான காளையின் வடிவமான நந்தீஸ்வரரையும் வணங்கினால், எல்லா நன்மைகளும் தேடி வரும்.