உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வீட்டில் பூச்சி தொல்லையா? வைஷ்ணவியை நினையுங்க | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வீட்டில் பூச்சி தொல்லையா? வைஷ்ணவியை நினையுங்க | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வீட்டில் பூச்சி தொல்லையா? வைஷ்ணவியை நினையுங்க இவள் விஷ்ணுவின் பெண் வடிவம். சப்த கன்னியரில் ஒருத்தியான இவளை நாராயணி சியாமளா என்றும் அழைப்பர். இவளது கண்கள் தாமரை போல் விரிந்து அகன்று இருக்கும் பச்சை நிறம் கொண்ட இவளது நான்கு கரங்களில் சங்கு சக்கரம் வைத்திருப்பாள் மற்றவை பக்தர்களைப் பாதுகாக்கும் அபயகரமாகவும் வரமளிக்கும் வரத கரமாகவும் உள்ளன கருடக்கொடி ஏந்திய இவளது வாகனமும் கருடன். விவசாயிகள் பாம்புத் தொல்லையில் இருந்து தப்பவும் வீட்டில் பல்லி தேள் கரப்பான் தொல்லையிலிருந்து விடுபடவும் இவளை வணங்குவர். சிலருக்கு புண் வந்து சீழ் பிடிக்கும். இவர்கள் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்தால் நோய் நீங்கும். சப்த கன்னியரில் மற்றொருத்தி இந்திராணி. இவள் இந்திரனின் பெண் வடிவம். அழகிய வேலைப்பாடு கொண்ட ஆடைகளை விரும்புவாள். யானைக் கொடி ஏந்திய இவளது வாகனம் வெள்ளை யானை இவள் தசைப் பகுதிக்கு அதிபதி. தசைபிடிப்பு அதிக சதையால் எடை கூடுதல் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் இவளை வணங்கலாம். அம்மை போட்டால் அது இறங்க இவளுக்கு சந்தனக்காப்பு செய்து பலாச்சுளை நைவேத்யம் செய்ய வேண்டும்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி