தேர்வில் வெற்றி பெற இவளை வணங்குங்க! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தேர்வில் வெற்றி பெற இவளை வணங்குங்க! சப்த கன்னியரில் ஒருத்தியான வாராகி திருமாலின் வராக அவதார பெண் வடிவம் தேர்வில் வெற்றி பெற இவளை வணங்க வேண்டும் மன்னர்கள் போருக்கு கிளம்பும் முன் இவளை வணங்கிச் சென்றனர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜசோழன் இவளுக்கு தனி சன்னதி அமைத்துள்ளான். கருப்பு பட்டு இவளுக்கு பிடிக்கும். பன்றி முகம் கொண்டவள் சிலம்பு அணிந்திருப்பாள் கலப்பை முசலம் என்னும் உலக்கை ஏந்தியிருப்பாள் இவளை வணங்குவோர் வீட்டில் அழுகை என்ற சொல்லுக்கே இடமில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க இழந்த பொருளை மீட்க இவளை வணங்குவர். மனக்குழப்பத்தால் முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் இவளுக்கு தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும்
அக் 10, 2024