சரஸ்வதியின் மறு வடிவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சரஸ்வதியின் மறு வடிவம் சந்த கன்னியரில் ஒருத்தியான பிராஹ்மியே சரஸ்வதி எனப்படுவாள். இவள் பிரம்மாவின் பெண் வடிவம். நான்கு தோள்கள், நான்கு கரங்களை உயைடவள். இவளது மேனி சூரிய, சந்திரர்களை மிஞ்சும் ஒளி கொண்டது. அனிச்சமலர் இவளது கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும். பத்மசானத்தில் அமர்ந்துள்ள இவள், சருமத்திற்கு அதிபதி. இவளை வணங்கினால் தோல் நோய்கள் நீங்கும். இவளுக்கு சர்க்கரைபாகு கலந்த பிட்டு நைவேத்யம். வாகனம் அன்னம். விஜயதசமியன்று சப்த கன்னியரில் ஒருத்தியான சாமுண்டீஸ்வரியை வணங்க வேண்டும். காளி என்றும் சொல்வர். இவளுக்கு எட்டு கரங்கள் உண்டு. சூலம், கட்சம், அம்பு, சங்கு, கரம், பாசம், பலகை, வில் ஏந்தியிருப்பாள். மகிஷ(எருமை) வாகனத்தில் அமர்ந்திருப்பாள். இவள் நரம்புக்கு அதிபதி. நரம்புத்தளர்ச்சியால் கை, கால் நடுக்கம் இருந்தால் இவளை வணங்கலாம். ஒரு ஊரின் காவல் தெய்வமும் இவளே. இவளுக்கு, வெள்ளிக்கிழமைகளில் தயிர்சாதம், பால், சர்க்கரை சேர்த்த அவல் நைவேத்யம் செய்ய வேண்டும்.