ஐந்து நந்திகள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இன்று பிரதோஷம். சிவாலயங்களில் காளை வடிவ நந்திக்கு பூஜை செய்யும் நன்னாள். சிவாலயங்களுக்கு சென்றால் எந்த நந்திக்கு பூஜை நடக்கிறதோ அவரை மட்டும் வணங்கி விட்டு திரும்பி விடுகிறோம். நிஜத்தில் பெரிய சிவன் கோவில்களில் ஐந்து வகை நந்திகள் இருக்கும். இவர்களில் மனித வடிவிலுள்ளவர் அதிகார நந்தி. சிவன் சன்னதி முன்புள்ள மகாமண்டப நுழைவுப்பகுதியில் அதிகார நந்தி வடக்கு நோக்கி இருப்பார். இவரையடுத்து சில கோயில்களில் சூரியனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்திருப்பர்.
அக் 15, 2024