வலது கால் ரகசியம் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar
வலது கால் ரகசியம் திருமணமான மணமக்கள் வீட்டுக்குள் வரும் போது, வலது காலை எடுத்து வைத்து வரச்சொல்கிறார்கள். இதற்கு காரணம் உண்டு. உடலின் வலது பக்கத்தை பாசிடிவ் ஆகவும், இடது பக்கத்தை நெகடிவ் ஆகவும் கொள்ள வேண்டும். வலது பக்கம் சக்தி மிக்கது. சக்தி குறைந்த இடது பக்கத்தில், இதயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே, இடது காலை ஊன்றினால் தடுமாற்றம் ஏற்படலாம். புதிதாக திருமணமானவர்கள், தடுமாற்றத்துடன் கீழே விழ நேர்ந்தால், அது அபசகுனமாகக் கருதப்படும்.
அக் 22, 2024