உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சென்னை அருகே இவ்வளவு பழமையானா கோயிலா? திருப்போரூர் டு தையூர் வரலாறு | LordMuruga

சென்னை அருகே இவ்வளவு பழமையானா கோயிலா? திருப்போரூர் டு தையூர் வரலாறு | LordMuruga

சென்னை அருகே இவ்வளவு பழமையானா கோயிலா? திருப்போரூர் டு தையூர் வரலாறு | LordMuruga | Murugantemple | Thiruporur | Unexploredchennai செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோயில் உள்ளது. மற்ற கோயில்களை போல் கோபுர வாயிலில் இல்லாமல், சண்டிகேசுவரர் முருகன் சன்னதியில் அமர்ந்திருப்பது சிறப்பு. கோயில் குளத்தில் முருகன் நீராடி முருகீஸ்வரனை வழிபாடு செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இந்த குளத்தில் நீராடினால், தீராத வியாதிகளும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முருகன் வழிபட்ட கோயில் என்பதால் காளஹஸ்தியில் ராகு கேது தோஷம் கழிப்பது போன்ற பலன் இங்கேயும் கிடைப்பதாக கூறுகின்றனர். தையூர் கோயிலில் உள்ள முருகன் சுயம்புவாக காட்சி தருகிறார். கோயிலில் அந்தரளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளது. இந்த கோயில் 9ம் ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்லவர்கள் மற்றும் விஜயநகர காலத்தில் கற்கோயிலாக புனரமைக்கப்பட்டது. விநாயகரின் பீடத்தில் உள்ள கல்வெட்டில் “ஸ்ரீ உருமேற்று” என எழுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொருள் குறித்து ஆய்வு செய்து வருகின்றர். இந்த விநாயகர் சிலை 9-10 ம் நூற்றாண்டு அபராஜிதன் அல்லது கம்ப்வர்மன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். முருகப்பெருமான் திருப்போரூர் சென்று தாருகாசுரனுடன் போரிட்டு, இந்த கோயிலில் உள்ள சிவனை வழிபட்டார். அதன் பிறகு அசுரனை வெற்றி கண்டார். இந்த கோயிலில் சிவனை முருகன் வழிபட்டதால் சுவாமி முருகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தீராத தோஷங்களில் இருந்து விடுபட, குழந்தை பாக்கியம், திருமண தடைகள் நீங்க இந்த கோயில் பரிகார ஸ்தலமா இருக்கிறது. பிரதோஷம், மகா சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, மார்கழி மாத ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். வைகாசி விசாகத்தன்று முருகன் திருக்கல்யாணம் விமர்சையாக நடத்தப்படும்.

அக் 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ