உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சொத்து வரி கட்டும் புதுமை | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

சொத்து வரி கட்டும் புதுமை | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

சொத்து வரி கட்டும் புதுமை | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam கொல்லத்தில் இருந்து பரணிக்காடு வழியாக 35 கி.மீ. சென்றால் பொருவழி கிராமம் வரும். இங்குள்ள எடக்காடு பகுதியில் மகாபாரத கவுரவர் தலைவன் துரியோதனனுக்கு கோவில் உள்ளது. கொட்டாரக்கராவில் இருந்து புத்துõர் அல்லது ஏனாது வழியாக 25 கி.மீ. சென்றாலும் இவ்வூரை அடையலாம். பாண்டவர்களைத் தேடி நாடெல்லாம் அலைந்த துரியோதனன் இங்கும் வந்தான். தாகம் அதிகரிக்க ஒரு மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டான். அவள் அவனுக்கு வெள்ளை நிற புளிப்பு பானம் ஒன்றைக் கொடுத்தாள். சுவையாக இருந்ததுடன் தாகத்தையும் களைப்பையும் தீர்த்தது அந்த பானம். இது என்ன என்று மூதாட்டியிடம் விசாரித்தான். ஐயா! இதை கள் என்று சொல்வோம். தென்னை மரத்திலிருந்து கிடைக்கிறது என்றாள். இரக்கம் மிக்க அந்த மூதாட்டியும் ஊர் மக்களும் நன்றாக வாழ அங்குள்ள மலை ஒன்றில் அமர்ந்து சிவனை பிரார்த்தித்தான் துரியோதனன். அவனது நற்குணத்தை பாராட்டி ஊர் மக்கள் ஒரு கோவில் எழுப்பினர்

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !