உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / எறும்புகளைக் கொல்லாதீங்க! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

எறும்புகளைக் கொல்லாதீங்க! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

எறும்புகளைக் கொல்லாதீங்க! சுறுசுறுப்பின் சின்னமே எறும்புகள் தான். அது இயல்பில் கடிக்கும் தன்மை உடையது. அதற்காக எறும்புப்புற்றின் மீது விஷ பவுடரைத் துõவக்கூடாது. தானங்களில் சிறந்தது அன்னதானம். அதை பணக்காரர்கள் இட்டால் ஏழைகளின் பசி தீரும். ஆனால் அந்த ஏழைகள் என்ன தானம் செய்யலாம் எறும்புகள் நாம் சிந்தும் உணவுக்காக அலையும். அவற்றை அலைய விடாமல் எறும்புப் புற்றுள்ள இடங்களில் அரிசியை பொடி செய்து இட்டால் கிடைக்கும் புண்ணியம் அளவற்றது. இத்தகையவர்களுக்கு சிவன் அருள் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தானத்தை செய்தால் கிடைக்கும் புண்ணியம் இரட்டிப்பாக இருக்கும். இலவச ரேஷன் அரிசியை எவ்வளவோ வீணாக்குகிறார்கள். இதை பொடி செய்து எறும்பு புற்று அருகே போடுங்கள். அவற்றுக்கு அது நல்ல உணவு. தேங்காய் மூடியில் எறும்பு வந்து விட்டால் அவற்றை வெயிலில் தட்டக்கூடாது. நிழலில் ஓரமாக தட்டி வேறு எங்காவது செல்ல வழி செய்யுங்கள் என்கிறார் வாரியார் சுவாமி.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !