மூன்றரை கிலோ எடையில் தங்க சட்டை | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூஜையின் போது சாத்தும் தங்க அங்கி சித்திரைதிருநாள் மகாராஜாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதன் எடை ஏறத்தாழ மூன்றரை கிலோ. சரியாகச் சொன்னால் 3.36 கிலோ. அதாவது 3360 கிராம்...420 பவுன். இதை ஒரு பெட்டியில் வைத்து ஆரன்முளா என்ற ஊரிலுள்ள பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வருவர். கோழஞ்சேரி பத்தனம்திட்டா வழியாக வரும் ஊர்வலம் மலையோலப்பட்டி என்ற கிராமத்திலுள்ள தேவி கோயிலில் அன்றிரவு தங்கும். மறுநாள் ரானி வடசேரிக்கரை நிலக்கல் வழியாக பம்பை வரும். அதுவரை வண்டியில் வரும் பெட்டியை மலைப்பாதையில் தலையில் சுமந்து ஐயப்பன் சன்னிதானத்துக்கு கொண்டு செல்வர்.
நவ 19, 2024