உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சரண கோஷம் எதற்கு? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

சரண கோஷம் எதற்கு? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

சபரிமலை செல்லும் ஒவ்வொரு பக்தரும் ஒலிப்பது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற தாரக மந்திரம். இதற்கு ஐயப்பா, உன்னையே சரணடைகிறேன், உன் திருவடி நிழலன்றி எனக்கு வேறு புகல் இல்லை என்பது பொருள். இந்த மந்திரத்தில் சரணம் என்பதே முக்கிய வார்த்தை. இந்த சொல்லுக்கு, பாதம் என்றும், அடைக்கலம் என்றும் இரு பொருள் உண்டு. யாரை அண்டினால், பாதுகாப்புடன் பயமின்றி வாழ முடியுமோ, அவரை அடைக்கலம் புகுவதே சரணாகதி எனப்படும். ஐயப்பனின் வாகனம் புலி. இது பயத்தை தரக்கூடியது. ஐயப்பனோ, அதன் மேலேயே ஏறி பவனி வருகிறார். அதாவது, பயத்தை அடக்கி வைத்திருக்கிறார்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !