ஐயப்பனுக்கு சனிக்கிழமை முக்கியம் ஏன்? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
ஐயப்பனுக்கு சனிக்கிழமை முக்கியம் ஏன்? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam முன்னொரு காலத்தில் சாஸ்தா வழிபாடு பங்குனி மாதத்தில் இருந்தது. பங்குனி உத்திர நட்சத்திரத்தில், சனிக்கிழமையன்று சாஸ்தா அவதரித்தார். இதனால் தான், பங்குனி உத்திரத்தை சாஸ்தா கோவில்களில் விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். சாஸ்தாவின், அவதாரமான ஐயப்ப சுவாமிக்கும் சனிக்கிழமையே முக்கியம். காரணம் தெரியுமா? சபரிமலை கோவில் கட்டும் பணியை, பந்தள மன்னர் ராஜசேகரன், ஒரு கார்த்திகை முதல் தேதியன்று ஆரம்பித்தார். இந்தப்பணி மார்கழி மாதம் கடைசி நாளில் முடிந்தது. தை மாதம் முதல்நாள் சனிக்கிழமை, தேய்பிறை பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரத்துடன் கூடிய சுபயோக சுபதினத்தில், ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனால் தான், ஐயப்பனை வழிபட சிறந்த நாளாக சனிக்கிழமை உள்ளது. சனிதோஷம் நீங்க, மாளிகைபுறத்தம்மன் சன்னிதியில் கொடுகொட்டி பாடல் பாடி, பரிகாரம் செய்வர்.