இவரே அமைதியின் தூதுவர் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு சண்டை போடக்கூடாது. அமைதியைப் பேண வேண்டும். பூபால பளிஞ்ஞன் என்ற காளி பக்தன் நேபாளத்தில் வசித்தான். அவன் காளி பூஜை நடத்தி சாகாவரம் பெற விரும்பினான். இதற்காக காளிக்கு பலியிட ஒரு இளம் பெண்ணை மந்திரக்கயிறு கட்டி இழுத்து வந்தான். அவளால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவளது கதறல் ஒலி சிவபெருமானின் காதுகளில் விழுந்தது. தன் மகன் சாஸ்தாவை அழைத்த சிவன் அவளைக் காப்பாற்ற உத்தரவிட்டார். சாஸ்தா அவள் முன் தோன்றியதுமே அவளைக் கட்டியிருந்த மந்திரக்கயிறு அவிழ்ந்தது.
டிச 04, 2024